ஞாயிறு, 3 ஜனவரி, 2010

பூஜ்யம்

இது என் முதல் பதிவு .

99 களில்
நான் மிகவும் விரும்பி வாசித்த
ஒரு கவிதைப் புத்தகம் ...
"பூஜ்யம்" .

கோவை-யை சேர்ந்த
"தரு"
இந்த கவிதை தொகுப்பை
வெளியிட்டிருக்கிறது.

இதன் ஆசிரியர்
ஸ்ரீபதி பத்மநாபா "திருப்பூரை" சேர்ந்தவர்.
மிக மிக இரசித்த கவிதை என்பதால்
அதனூடே சேர்ந்து என் முதல் பதிவு.




" பூஜ்யத்தைப் பற்றி என்ன எழுதுவது
என்று தெரியாமலேயே
கவிதைக்கு பூஜ்யம் என்று
தலைப்பிடச்சொன்னது உள்.

சில கிறுக்குப்பிடித்த சாயங்கால வேளைகளில்
இப்படி
மனசுக்கும் கிறுக்குப் பிடித்துக் கொள்கிறது.

கவிதை தானாய் வரவேண்டும்
என்று தெரிந்தும்
எழுது எழுது என்று துடிக்கிறது அது.

நித்திய அவசர நிமிஷங்களின் இடுக்குகளில்
காத்திருக்கிற வேளையில்
வெற்றிடமாகும் மனசைப் பின்
எப்படி நிரப்புவது?

தாங்கள் பூஜ்யன்களால்
நிரப்பப்பட்டுக் கொண்டிருக்கிறோம்
என்ற இந்த வரிகளின் அங்கலாய்ப்பைப்ச
சட்டை செய்யாமல்
மை துப்பிக் கொண்டிருக்கிறது பேனா.

வட்டங்கள் எல்லாம் பூஜ்யங்கள் அல்ல
என்று யாரோ சொன்னது
நினைவுக்கு வந்து
அதையும் எழுதச் சொல்கிறது மனது.

இதோ
இப்போது அடுத்த வரி அகப்படாமல்
பில்லியனுக்கு எத்தனை பூஜ்யம்
என்று எண்ணிக்கொண்டிருக்கிறேனே
... அதையும் !


இப்படியாக,
பூஜ்யத்தைப் பற்றி எழுதமுடியாதபடிக்கு
நிறைவாய்
இருக்கிறேன்
என்று ஒரு சப்பைக்கட்டு மனதில் தோன்றி,
கவிதையை முடித்துவிட்டுச் சிரிக்கையில் ...

அடுத்த கவிதைக்காய்
காத்திருக்கிறது
அடுத்த
பூஜ்யத் தாள். "

8 கருத்துகள்:

மோனி சொன்னது…

டெஸ்டிங்...

மதுரை சரவணன் சொன்னது…

zero makes u as hero . good thought u scored lot , not zero.

பத்மா சொன்னது…

nice

அண்ணாமலையான் சொன்னது…

வாழ்த்துக்கள்... தமிஷிஷ் ல சப்மிட் செய்ங்க... அப்பத்தான் ஓட்டு போடலாம்... தொடர்ந்து எழுதுங்க...

சென்ஷி சொன்னது…

நல்லா இருக்குங்க

பா.ராஜாராம் சொன்னது…

நல்லாருக்கு மோனி.பகிர்வுக்கு நன்றி!

www.bogy.in சொன்னது…

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

மோனி சொன்னது…

[ma]testing[/ma]

கருத்துரையிடுக